இராமேஸ்வரத்தில் பரபரப்பு... பாம்பன் பாலத்தினருகே கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்!
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் 4,223 வகையான கடல்வாழ் தாவரங்களும், விலங்கினங்களும் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.
இவற்றில் திமிங்கலம், கடல் பசு, டால்பின் உள்ளிட்ட பாலூட்டி வகைகளும் அடங்கும். இந்நிலையில் ப்ளூ வேல் என்றழைக்கப்படுகிற ராட்சத நீலத் திமிங்கிலத்தின் குட்டி ஒன்று இன்று காலை இறந்த நிலையில் பாம்பன் பாலத்தின் அருகே உள்ள கடற்கரையில் கரை ஒதுங்கியது.

இதனைக் கண்ட மீனவர்கள் உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு மண்டபம் வனத்துறையினருடன், மரைக்காயர் பட்டினத்தில் உள்ள மத்தியக் கடல் மீன்வள நிலைய ஆராய்ச்சியாளர்கள் விரைந்து சென்று திமிங்கலத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நீல திமிங்கலம் எதனால் உயிரிழந்தது என்று உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உடல்கூராய்வுக்குப் பின்னர் இன்று மாலை புதைக்கப்படும் என்று கூறப்பட்டது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
