தென்காசியில் பரபரப்பு... கள் வியாபாரியை சுட்டுப்பிடித்த போலீசார்!

 
கள் தென்காசி கள் தென்காசி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மருதம்புத்தூர் பகுதியில் சட்டவிரோத கள் விற்பனை நடைபெறுவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்று மதியம் போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மருதம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (32) என்பவர் கள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்தச் சென்ற போலீசாரைக் கண்டதும், மணிகண்டன் ஆவேசமடைந்துள்ளார். தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் போலீசாரை நோக்கிப் பாய்ந்து தாக்க முயன்றதாகத் தெரிகிறது.

கள்

நிலைமை கையை மீறிச் செல்வதைக் கண்ட போலீசார், தற்காப்புக்காகத் தங்களது கைத்துப்பாக்கியால் மணிகண்டனை நோக்கிச் சுட்டனர். இதில் அவரது காலில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதில் காயமடைந்த மணிகண்டனை மீட்ட போலீசார், பலத்த பாதுகாப்புடன் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக மருதம்புத்தூர் மற்றும் ஆலங்குளம் பகுதிகளில் பதற்றம் நிலவுவதால், கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், சட்டவிரோத மது மற்றும் கள் விற்பனைக்கு எதிராகக் காவல்துறையினர் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை மற்ற வியாபாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மக்களுக்கு குட்நியூஸ்!! உடனே முந்துங்க!! இன்று மிகப்பெரிய வாய்ப்பு!!

சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். தற்காப்புக்காகப் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்துத் தனியாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.