அமெரிக்காவில் பரபரப்பு.. 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 3 கைதிகளுக்கு மரண தண்டனை!

 
அமெரிக்கா மரண தண்டனை

அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் மூன்று வெவ்வேறு மாநிலங்களில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒக்லஹோமா, டென்னசி மற்றும் அலபாமா ஆகிய மாநிலச் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு ஊசி மூலம் நச்சு செலுத்தி இந்தத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

விடுதி பெண் ஊழியரைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற அந்தோணி டேரல்,  காதலியைச் சுட்டுக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற கார்லோஸ்,  சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற ஜெரமி வில்லிங்ஸ் ஆகிய மூன்று பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னதாக 2010-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ஒரே நாளில் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, தற்போது மீண்டும் ஒரே நாளில் மூன்று பேருக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.