திருச்சியில் பரபரப்பு... முழுமையாக எரிந்த நிலையில் மனித உடல் மீட்பு - போலீசார் விசாரணை!

 
சடலம் எரிந்த நிலையில் உடல் கொலை விசாரணை திருச்சி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சுடுகாட்டில் அடையாளம் தெரியாத மனித உடல் முற்றிலும் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மண்ணச்சநல்லூர் பகுதிக்குட்பட்ட சுடுகாட்டில் மனித உடல் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் முற்றிலும் எரிந்த நிலையில் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பாலியல் கொலை உல்லாசம் க்ரைம்

யாரோ மர்ம நபர்கள் கொலையைச் செய்துவிட்டு, உடலை அடையாளம் காண முடியாதவாறு மறைப்பதற்காக இங்கு கொண்டுவந்து எரித்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

எரிக்கப்பட்ட சடலம் ஆணா அல்லது பெண்ணா என்பது குறித்தும், அப்பகுதியில் கடந்த சில நாட்களாகக் காணாமல் போனவர்கள் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.