வேலூரில் பரபரப்பு... பெண் தலைமைக் காவலரைக் குத்திக் கொன்ற கணவர்!

 
தலைமைக் காவலர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பெண் தலைமைக் காவலர் ஒருவர் அவரது கணவராலேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் பகுதியில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த தாமரைச்செல்வி என்பவருக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஃப்டஃப்

சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த கணவர் தாமரைச்செல்வியைக் கத்தியால் கொடூரமாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ட்க்

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், தாமரைச்செல்வியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மனைவியைக் கொலை செய்து தப்பிய கணவரைக் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.