மேற்கு வங்கத்தில் பரபரப்பு... மகுவா மொய்த்ராவுக்கு கைது வாரண்ட் - நீதிமன்றம் உத்தரவு!

 
மகுவா மொய்த்ரா திரிணாமுல் காங்கிரஸ்

பெண்களை அவமதிக்கும் வகையிலும், வெறுப்பைத் தூண்டும் வகையிலும் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகூவா மொய்த்ராவுக்கு எதிராக மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணாநகர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

அவதூறு மற்றும் வெறுப்புப் பேச்சு தொடர்பான புகாரின் பேரில் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும், மகூவா மொய்த்ரா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி அவருக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

மகூவா மொய்த்ரா நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானால், அங்கிருக்கும் சிலர் அவரை கேலி செய்து பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பணத்துக்காகக் கேள்வி கேட்ட விவகாரம் மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானியிடம் பாராளுமன்ற உள்நுழைவுத் தரவுகளைப் பகிர்ந்துகொண்ட குற்றச்சாட்டில், மகூவா மொய்த்ரா மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.