பரபரப்பு... 220 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்... மீட்புக் குழு தீவிர முயற்சி!

 
hariyana

ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்திற்கு உட்பட்ட தனவ்ரா கிராமத்தில், இன்று காலை நான்கு வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு திறந்த நிலையில் இருந்த 220 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் அந்தச் சிறுவன் தவறி விழுந்தான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள், உடனடியாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

hariyana

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பாலா மாவட்ட துணை ஆணையர் அஜய் சிங் தோமர், மீட்புப் பணிகளை உடனடியாகத் தொடங்க உத்தரவிட்டார். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவத்தினர் இணைந்து கூட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளை கிணற்றுக்குள் கேமராக்களை அனுப்பிச் சிறுவனின் அசைவுகளை மீட்புக் குழுவினர் மிகவும் துல்லியமாகக் கண்காணித்து வருகின்றனர்.

Four-year-old boy rescued after falling into borewell in Punjab's Hoshiarpur - The Hindu

குழாயின் வழியாகச் சிறுவனுக்குத் தேவையான ஆக்சிஜன் போன்ற மருத்துவ உதவிகள் தொடர்ந்து தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. சிறுவனைப் பாதுகாப்பாக மீட்பதற்காக, ஆழ்துளை கிணற்றின் அருகே மற்றொரு இணைக்குழி தோண்டும் பணி அதிநவீன இயந்திரங்கள் மூலம் நடைபெறுகிறது. இந்தச் விபத்துச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.