இந்திய பங்குச்சந்தைகளில் 2-வது நாளாக வலுவான ஏற்றம் - சென்செக்ஸ் 685.34 புள்ளிகள் உயர்வு!
Oct 6, 2026, 18:20 IST
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகள் வெளியாக இருக்கும் சூழலிலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் தாக்கத்தினாலும் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று குறிப்பிடத்தக்க ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று 685.34 புள்ளிகள் அதிகரித்து, 73,067.81 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 220.35 புள்ளிகள் உயர்ந்து, 22,776.10 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக நேர்மறையான நகர்வைக் கண்டு வருவது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
