மின்கட்டண உயர்வு குறித்து சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி கவனஈர்ப்புத் தீர்மானம்!

 
செந்தில்பாலாஜி ஜேசிபி செந்தில்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் மின்கணக்கீடு முறைகள் தொடர்பாகப் பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.

மாநிலத்தில் மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் கணக்கீடு செய்யப்படும் முறைகள் காரணமாகப் பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள் மத்தியில் அதிருப்தியும் விரக்தியும் ஏற்பட்டுள்ளதாகச் செந்தில் பாலாஜி சுட்டிக்காட்டினார்.

மின் நிர்மல்குமார்

மின்கணக்கீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும், இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தத் தீர்மானத்திற்குப் பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், "சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் தற்போது அவைக்கு வருகை தராத நிலையில், அவரிடமிருந்து முறைப்படி பதில் பெறப்பட்டதும் இக்கோரிக்கை குறித்துச் சட்டமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.