"தவெக ஆட்சியை கவிழ்க்க முடியாது" - உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வாதம்!

 
செந்தில்பாலாஜி செந்தில்

தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம் ₹35 கோடி பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காரசாரமான விசாரணை நடைபெற்றது.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், நீதிமன்றத்தில் பல்வேறு முக்கிய விவாதங்களை முன்வைத்தார். செந்தில் பாலாஜி ஒரு முன்னாள் அமைச்சர் என்றும், அவர் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பவர் என்பதால் எக்காரணத்தைக் கொண்டும் தலைமறைவாக மாட்டார் என்றும் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும், காவல்துறை மற்றும் நீதிமன்ற விசாரணைக்கு அவர் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி, அசோக்குமார்

தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் உள்நோக்கங்களைச் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கடுமையாக மறுத்தார். சட்டமன்றச் சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் ஒரு சாதாரண நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலமாகவோ அல்லது பிற அரசியல் நகர்வுகள் மூலமாகவோ, தற்போதைய தவெக ஆட்சியை அவ்வளவு எளிதாகக் கவிழ்த்துவிட முடியாது என்று வாதாடப்பட்டது.

செந்தில் பாலாஜி ₹35 கோடி வரை பேரம் பேசினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் எவ்விதமான முகாந்திரமோ அல்லது நம்பத்தகுந்த ஆதாரங்களோ காவல்துறையிடம் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.

செந்தில்பாலாஜி செந்தில் பாலாஜி

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த முன்ஜாமீன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணையைத் தள்ளி வைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் இந்த விவகாரமும், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த சட்டப் போராட்டமும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.