செப்டம்பர் 11 பாரதியார் நினைவு நாள்... அவரது புகழை கொண்டாடுவோம்!!

 
பாரதியார்

பாரதியார் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதிக்கு டிசம்பர் 11, 1882 ல் மகனாகப் பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன். சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887 ல் அவருடைய தாயார் மறைந்த பிறகு பாட்டி பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.பள்ளிப்படிப்பின் போதே கவி புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். 1897ல் செல்லம்மாளை மணந்தார். 1898ல் எட்டையபுரம் அரண்மனையில் பணிக்கு சேர்ந்தார்.

இவருடைய கவித்திறனை பாராட்டி ‘எட்டயபுரம் அரசர் எட்டப்ப நாயக்கரால் பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். எட்டயபுர மன்னரின் அழைப்பின் பேரில் மீண்டும் தமிழகம் திரும்பினார். பாரதியார் இதழாசிரியராகவும் , மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணிபுரிந்தார்.

இன்று பிறந்தநாள் காணும் பாரதியார் புகழை இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்வோம்!!
பாரதியா கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களை பெற்றவர். நவீன தமிழ் கவிதையின் முன்னோடி. எழுத்துக்களின் மூலம் மக்களிடையே சுதந்திர தாகத்தை ஊட்டியவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
பெண்ணடிமைக்காக ஓங்கி குரல் கொடுத்தவர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று இருந்த காலகட்டத்தில் பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என பாடியவர் பாரதி.1921 ல் பார்த்தசாரதி கோவில் யானை தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார்.1921 செப்டம்பர் 11 அதிகாலை 01:30 மணிக்கு காலமானார். இவருடைய நூல்கள் அனைத்தும் நாட்டுமையாக்கப்பட்டன.1882ம் ஆண்டு டிசம்பர் 11 அன்று எட்டயபுரத்தில் பிறந்த சுப்பிரமணியன், 7 வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார்.

இன்று பிறந்தநாள் காணும் பாரதியார் புகழை இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்வோம்!!
11 வயதில் எட்டயபுர சமஸ்தானத்தில் தன் புலமையை நிரூபித்த சுப்ரமணியனுக்கு, பாரதி என பட்டமளித்துப் பாராட்டினார் எட்டயபுர மன்னர்.1904ம் ஆண்டு சென்னைக்கு வந்த பாரதி, சுதேச மித்திரன், சக்ரவர்த்தினி பத்திரிகைகளில் பணியாற்றினார். விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியை சந்தித்த பின்னர் பெண்ணுரிமை பற்றிய அவரது சிந்தனை மேலோங்க, பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என முழங்கினார்.1921-ம் ஆண்டு ஜூலை மாதம், பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்ட பாரதி உடல்நலம் குன்றினார்.

தனது 39 வயது வரை வாழ்ந்த பாரதி 1921 செப்டம்பர் 11 அன்று வரலாறாக மாறினார்.மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு, ஆண்டு தோறும் செப்டம்பர் 11ம் தேதியன்று மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் இனி மகாகவி தினமான செப்டம்பர் 11ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப்போட்டி நடத்தி ‘பாரதி இளங்கவிஞர் விருது’ வழங்கப்படும். அப்படி ‘பாரதி இளங்கவிஞர் விருது’ பெறும் ஒரு மாணவருக்கும் மற்றும் ஒரு மாணவிக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்திருந்தார். 

.இந்நிலையில், மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று செப்டம்பர் 11ம் தேதி “மகாகவி நாள்” என கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு மெரினாவில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். முதலில் தேசிய மயமாக்கப்பட்ட நூல்கள் என்ற பெருமையை இவரது நூல்கள் பெற்றன. பாரதியின் புகழை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம் பாரதியை கொண்டாடுவோம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web