வாங்கிய ஒரு வருடத்தில் 4 முறை சர்வீஸ்.. கடை வாசலில் ஃப்ரிட்ஜை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற நபரால் பரபரப்பு!

 
வாணியம்பாடி பிரிட்ஜ்

வாணியம்பாடி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான சுபாஷ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஓராண்டுக்கு முன் மனைவியின் தாலியை அடகு வைத்து ஃபிரிட்ஜ் வாங்கினார். ஃபிரிட்ஜ் வாங்கி ஓராண்டிற்குள் 4 முறைக்கு மேல் சர்வீஸ் செய்துள்ளார். எனினும் அது சரியாக இயங்கவில்லை. இதனால், ஃபிரிட்ஜை வாங்கிய ஷோரூமுக்கு கொண்டு  ஊழியர்கள் முன் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை கிளப்பியுள்ளது.

அதாவது, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சிஎல் சாலையில் இயங்கி வரும் பிரபல தனியார் ஷோரூமில் 2 ஆண்டு உத்தரவாதத்துடன் இந்த ஃபிரிட்ஜை ஓராண்டுக்கு முன்பு சுபாஷ் வாங்கினார். வாங்கிய நாள் முதல், அடிக்கடி பழுது ஏற்பட்டு, சர்வீஸ் சென்டர் மூலம் பழுது பார்க்கப்பட்டுள்ளது. அதோடு நான்கு முறை சர்வீஸ் செய்தும் சரி ஆகாததாஅல் மனமுடைந்த சுபாஷ், தனது பிரிட்ஜை ஆட்டோவில் எடுத்து வந்து ஷோரூமுக்கு கொண்டு வந்தார்.

அங்குள்ள ஊழியர்களிடம் வேறு ஃபிரிட்ஜை மாற்றும்படி கூறினார். ஆனால் ஊழியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ், ஷோரூம் வாசலில் வைத்து பெட்ரோலை ஊற்றி கொழுத்த முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை சமாதானம் செய்து ஃபிரிட்ஜை சரி செய்து தருவதாக கூறி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா