சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தினர் 7 பேர் கைது!

திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தினர் 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோவை, திருப்பூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட தொழில் நகரங்களில் வங்க தேசத்தினர் ஏராளமானோர் சட்டவிரோதமாக உரிய ஆவணங்களின்றி வசித்து வருவதாக பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தன.
இந்நிலையில் கடந்த ஜனவரி 11ம் தேதி இரவு திருப்பூர் மாநகர் மற்றும் பல்லடம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் முறைகேடாகத் தங்கியிருந்த 31 வங்கதேசத்தினரை, கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்கியிருப்வர்களின் ஆவணங்களை போலீசார் பரிசோதித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் வடக்கு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வடமாநிலத்தவர்கள் போல இருந்த 13 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் 7 பேர் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் திருப்பூர் கொங்கு பிரதான சாலையில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தங்கி இருந்து, அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து உரிய ஆவணங்களின்றி, சட்டவிரோதமாக திருப்பூரில் தங்கியிருந்த 7 பேர் மீதும் வெளிநாட்டு வாழ் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!