தங்க சுரங்கத்திற்குள் ஊடுருவியதாக 7 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை.. ராணுவ வீரர்கள் வெறிச்செயல்!

 
கானா தங்க சுரங்கம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில், ஒபுவாசி நகரில், பிரபல தங்கச் சுரங்க நிறுவனமான `ஆங்லோகோல்ட் அசியான்டி'யின் தங்க வயல் உள்ளது. இந்தத் தங்க வயலில் நூற்றுக்கணக்கான சுரங்கங்கள் தோண்டப்பட்டு தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்தப் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு சுரங்கத்திற்குள் நுழைந்தவர்கள் நிர்வாகத்திற்குத் தெரியாமல் தங்கத் தாதுவை வெட்டி எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, ​​பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர், சிலர் காயமடைந்தனர். ஆயுதம் இல்லாமல் வந்த தொழிலாளர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தேசிய சிறு சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியது.

இருப்பினும், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 60க்கும் மேற்பட்டோர் நுழைந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஊடுருவல்காரர்கள் பாதுகாப்பு வேலியை உடைத்து உள்ளே நுழைந்து காவல் பணியில் இருந்த வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதனால் ராணுவமும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த கானா அதிபர் ஜான் திராமணி மகாமா உத்தரவிட்டுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web