ஆற்றில் மூழ்கி 7 வயது சிறுவன் பலி... கோவிலுக்கு சென்ற போது சோகம்!

 
சந்திரமூர்த்தி
 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி  பற்பநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர்  மோசஸ். இவரது மகன் 7 வயது சந்திரமூர்த்தி . இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மோசஸ் குடும்பத்துடன் நெல்லை அருகே கீழமுன்னீர்பள்ளத்தில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு வந்திருந்தார்.
 நீச்சல்
 பிற்பகலில் கீழமுன்னீர்பள்ளம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் மோசஸ் குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது சிறுவன் சந்திரமூர்த்தி ஆழமான பகுதியில் குளித்த போது திடீரென நீரில் மூழ்கத் தொடங்கினார். உடனே கூச்சலிட்டு தன்னை காப்பாற்றும்படி  அலறித் துடித்தார்.

இதனை கண்ட மோசஸ் உட்பட சிலர், சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் சிறுவனின் உடல் தண்ணீரில் மூழ்கியது. இதுகுறித்து பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வீரர்கள் பிற்பகல் 3 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போராடி மாலை 5 மணிக்கு சிறுவனின் உடலை மீட்டனர். 

ஆம்புலன்ஸ்
பின்னர் பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவிலுக்கு வந்த இடத்தில் சிறுவன் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web