பாலியல் வழக்கு.. 'ஆளுங்கட்சிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை' - ஜாமீனில் வெளிவந்த பி.ஆர்.சுந்தர் விளக்கம்!

 
பி.ஆர்.சுந்தர்

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரே நாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிரபல பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் பி.ஆர்.சுந்தர், இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தனக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து, சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் பி.ஆர்.சுந்தர் வெளியிட்டுள்ள பதிவில்,  இந்தச் சோதனையான மற்றும் கடினமான நேரத்தில் எனக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பி.ஆர்.சுந்தர்

தனக்கு ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் 'அண்ணன் சீமானுக்கு' சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"இது இரண்டு நபர்களுக்கு இடையே நிலவும் முற்றிலும் தனிப்பட்ட பிரச்சினை. இதில் எந்தவித அரசியலும் இல்லை. குறிப்பாக, இந்த விவகாரத்திற்கும் ஆளும் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை" என்று அவர் தனது பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.