10 ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை... அமராவதி சாமியார் மீது இளம்பெண் புகார்!
Jul 21, 2026, 17:40 IST
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் இயங்கி வரும் 'ஆனந்த மடம்' என்ற மடத்தின் சாமியார் மீது 24 வயது இளம்பெண் ஒருவர் அதிர்ச்சிகரமான பாலியல் புகாரை அளித்துள்ளார்.

தத்தாகிரி குரு ஜெய்ராம்ஜி மஹாராஜ் என்ற அந்தச் சாமியார், தன்னை கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கும், பாலியல் சுரண்டலுக்கும் உட்படுத்தியதாக அந்த இளம்பெண் காவல்துறையில் தெரிவித்துள்ளார். சிறுமியாக இருந்த காலம் முதலே இந்த அத்துமீறல் நடந்து வந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
