சங்கரன்கோவில் அதிமுக நகராட்சித் துணைத்தலைவர் மீது பாலியல் புகார்!

 
தென்காசி சங்கரன்கோவில் அதிமுக நகராட்சித் துணைத்தலைவர் பாலியல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சித் துணைத்தலைவரும், அதிமுக பிரமுகருமான கண்ணன் மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் பலாத்காரம் இளம்பெண்

பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில், தனக்கு 15 வயதாக இருந்த போது, டியூசனுக்குச் சென்ற வேளையில் கண்ணன் தன்னைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தை வெளியே யாரிடமாவது கூறினால் குடும்பத்தினரைக் கொன்று விடுவதாக மிரட்டி, கடந்த பல வருடங்களாக தன்னைத் தொடர்ந்து அவர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

மேலும் தனக்குப்பிறந்த மகனும் கண்ணனுக்கே பிறந்தவர் தான் என்றும், இது குறித்து முறையான டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டால் முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வரும் என்றும் அப்பெண் தனது புகாரில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி பிரமுகர் மீது பெண் ஒருவர் விடுத்துள்ள இந்த அதிர்ச்சி புகார் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.