நடுரோட்டில் பின்னால் இருந்து கட்டிப்பிடித்து பாலியல் சீண்டல்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

 
 ஸ்ருதி சிங்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இளம் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி சிங் என்ற இளம்பெண் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அதில், தோழி ஸ்ருதியுடன் சாப்பிட்டுவிட்டு வீட்டின் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எங்களை பைக்கில் மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்தார். யாரும் இல்லாத இடத்திற்கு இடத்தில் , பைக்கில் வந்த நபர் இறங்கி என்னை பின்னால் இருந்து கட்டிப்பிடித்து அநாகரீகமாக நடந்து கொண்டார். இதனால் பீதியடைந்த நான் எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டதால் அப்பகுதியில் மக்கள் திரண்டனர்.

அவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறிய பெண், அவர்களின் உதவியுடன் அந்த நபரை போலீசில் ஒப்படைத்தார். மேலும் தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நபரின் படத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பெங்களூரு நகரில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே என்ற கேள்வியையும் எழுப்பினார். மேலும், இந்த சம்பவம் குறித்து நான் புகார் தெரிவிக்கவில்லை. அப்படி புகார் கொடுத்தால் நீதிமன்றம், அலுவலகம் நான் தான் அலைய வேண்டும்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

இது அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற தெருக்கூத்துக்களை போலீசார் ஒழிக்க வேண்டும். பெண்கள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web