பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. பாஜக நிர்வாகி மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!

 
எம்.எஸ்.ஷா

இரு சக்கர வாகனம் வாங்கி தருவதாக கூறி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  மதுரை திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எம்.எஸ்.ஷா பாஜகவின் மாநிலப் பொருளாதாரப் பிரிவின் தலைவராகவும்  பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், எம்.எஸ்.ஷா  மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  மீது பள்ளி மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார். அதில், எம்.எஸ்.ஷா தனது மகளின் செல்போனுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மகளை தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தன்னுடன் தங்கினால் இருசக்கர வாகனம் வாங்கித் தருவதாக கூறி வெளி மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு தனது மனைவியும் (சிறுமியின் தாயார்) உடந்தையாக இருந்ததாக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன்படி பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா  மற்றும் சிறுமியின் தாயார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web