சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை... ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி போக்சோ வழக்கில் கைது!

 
ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரின் அடிப்படையில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் வீரமணி மற்றும் உடந்தையாக இருந்த தம்பதியினர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் காட்சிகள் அடங்கிய பென் டிரைவ் ஆதாரம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாலியல் பலாத்காரம் இளம்பெண்

சென்னை தேனாம்பேட்டையில் வீட்டை வாடகைக்கு எடுத்து, அதனை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரின் பொறுப்பில் வீரமணி விட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வீட்டில் சிறுமிகளை வரவழைத்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக முக்கியக் குற்றவாளியான தொழிலதிபர் வீரமணி (84) மற்றும் உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திர சிம்கன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கியப் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.