நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்... கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாப பலி!

 
சிறுமி சிறுமி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கும் வகையிலான மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஒரு பகுதியில் வசித்து வந்த 3 வயது பெண் குழந்தை ஒன்று காம மிருகங்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை யாருக்கும் தெரியாதவாறு அருகில் இருந்த ஒரு முட்புதரில் வீசிவிட்டு அந்த கும்பல் தப்பியோடிவிட்டது.

ஆம்புலன்ஸ்

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் முட்புதரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அந்த பிஞ்சு குழந்தை தற்பொழுது சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த கொடூரச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அனல் பறக்கும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த மனிதாபிமானமற்ற செயலில் அந்தப் பகுதியில் தங்கி வேலை செய்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் 4 பேர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சி (19) என்பவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.