16 வயது சிறுமி பிறப்புறுப்பில் இரும்பு ராடு திணித்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரக் கொலை!

 
அஸ்ஸாம்

அசாம் மாநிலம் ஹேலாக்கண்டி மாவட்டத்தில் வசித்து வந்த 16 வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் 01 ம் தேதியன்று சடலமாக மீட்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்ததால் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணையைத் தொடங்கினர்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் ஐவரை அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிறுவனும் அடங்குவான் என்பதுடன் இவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியைத்   அழைத்துச் சென்று கூட்டாக வன்கொடுமை செய்து இந்தக் கொடூரச் செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பாலியல் கொலை உல்லாசம் க்ரைம்

வன்கொடுமை செய்தபின் சிறுமியை மிகக் கடுமையாகத் துன்புறுத்தியதுடன் பிறப்புறுப்பில் இரும்பு ராடு திணித்துச் சித்ரவதை செய்து கொன்றுள்ளனர் என்பது மருத்துவப் பரிசோதனையில் அம்பலமானது. மனிதாபிமற்ற இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மூலம் மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.