இந்திய விமானப்படையில் முதல் பெண் ஏர் வைஸ் மார்ஷலாக சக்தி சர்மா நியமனம்!

 
சக்தி ஷர்மா

இந்திய விமானப்படையின் முதல் ஏர் வைஸ் மார்ஷலாக, விமானப்படை பெண் அதிகாரி சக்தி ஷர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், இந்திய ஆயுதப் படைகளின் மருத்துவம் சாராத பிரிவைச் சேர்ந்த இப்பதவியை எட்டிய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவரது இந்தச் சாதனை இந்தியப் பெண்கள் மற்றும் முப்படை வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

விமானப்படை

இந்த பதவியோடு அவர் விமானப்படைத் தலைமையகத்தின் உதவித் தலைவர் என்ற பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளார். விமானப்படையில் கல்விப் பிரிவின் கீழ் பணியாற்றி வரும் பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையிலான இந்த நியமனம் நாடு முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இந்த உயரிய நியமனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 1994ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய விமானப்படையின் கல்விப் பிரிவில் அவர் இணைந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 3 தசாப்தங்களுக்கும் மேலாக அவர் விமானப்படையில் தனது சிறப்பான சேவையை ஆற்றி வந்துள்ளார். அவரின் நீண்ட கால அர்ப்பணிப்பும் உழைப்பும் தற்போது அவருக்கு இந்த உயரிய பதரியைப் பெற்றுத் தந்துள்ளது.