முத்தமழை பொழியட்டுமா?! காதலர் வாரத்தில் கிஸ் டே... லவ்வருடன் கொண்டாட டிப்ஸ்!
இன்று பிப்ரவரி 13ம் தேதி வியாழக்கிழமை காதலர் தின உற்சாக வாரத்தின் 7 வது நாளில் கிஸ் டே எனப்படும் முத்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளின் வரலாறு குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தை விமரிசையாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரத்திற்கு முன்பே அதாவது பிப்ரவரி 7ம் தேதி முதல் காதலர் வாரம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.பிப்ரவரி 7ல் ரோஜாதினத்துடன் தொடங்கும் காதலர் வாரத்தில் 2 வது நாள் அதாவது பிப்ரவரி 8ம் தேதி ப்ரோபோஸ் டே, பிப்ரவரி 9ம் தேதி சாக்லேட் டே, பிப்ரவரி 10ம் தேதி டெடி டே, பிப்ரவரி 11ம் தேதி ப்ராமிஸ் டே மற்றும் பிப்ரவரி 12ம் தேதி ஹக் டே என உற்சாகம் பொங்க கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த உற்சாக வாரத்தின் 7ம் நாளான இன்று பிப்ரவரி 13 கிஸ் டே எனப்படும் முத்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது
அன்பு, காதல், பாசம், நட்பு என பல உணர்ச்சிகளின் அன்பு வெளிப்பாடாக முத்தம் இருக்கிறது. இந்த நாளில் உங்கள் உறவை மேம்படுத்தும் வகையில் நீங்கள் அன்பு, ஆர்வம் மற்றும் பாசத்துடன் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் நம்முள் இருக்கும் பாச பிணைப்பை, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு உலகளாவிய மொழியாக இருக்கிறது.
முத்தமானது உறவுக்குள் இருக்கும் இருவரிடையிலான நெருக்கம் மற்றும் பிணைப்பை வலுப்படுத்துகிறது . லேசான முத்தம் முதல் உணர்ச்சிமிக்க அரவணைப்பு என உங்கள் துணையிடம் இந்த நாளில் நீங்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சி எதுவாக இருந்தாலும், இந்த முத்த தினத்தின் உண்மையான சாராம்சமானது உங்களின் மற்றொரு பாதியாக நீங்கள் கருதும் துணையை நம்பி அவர்களுடன் ஒன்றாக இருக்கும் நெருக்கத்தை பகிர்ந்து கொள்ளும் தருணங்களில் உள்ளது.

20ம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் முத்த தினம் மிகவும் பரவலாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. காதல் வாரமானது இளைஞர்களை இலக்காக கொண்ட பாப் கலாச்சாரம் மற்றும் மார்கெட்டிங் யுத்திகளின் ஒரு பகுதியாக மாறிய பிறகு, காதலர் தின கொண்டாட்டங்களில் முக்கிய ஒன்றாக முத்த தினம் மாறியது. எனினும் காதல் உறவில் உள்ளவர்கள் மற்றும் தம்பதிகள் இடையிலான உறவை மேலும் நெருக்கமாக்க, நமக்கு சொந்தமானவர் என்ற உணர்வை வளர்க்க ஒரு முக்கியமான நிகழ்வாக தற்போது இந்த கிஸ் டே இருந்து வருகிறது.
முத்த தின கொண்டாட்டங்களை பொறுத்தவரை காதலிப்பவர்கள் துணையுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக பொழுதை கழித்து முத்தமிட்டு கொள்ளலாம். அவரவர் வசதிக்கேற்ப வெளியில் செல்லலாம். அல்லது வீட்டிலேயே உங்களுக்குப் பிடித்த ஷோக்கள் அல்லது திரைப்படங்களை ஒன்றாக அமர்ந்து பார்த்து மகிழலாம். பிடித்தமான உணவுகள் மற்றும் இனிப்பு வகைகளை ஒன்றாக சமைத்து சாப்பிடலாம். சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் கையால் செய்யப்பட்ட பரிசுகளை கொடுக்கலாம்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
