அதிர்ச்சியில் ஷங்கர்... இந்தியன் தாத்தாவைக் கதற விடும் நெட்டிசன்கள்!

 
இந்தியன் 2

பணம் கொடுத்து படத்துக்கு பப்ளிசிட்டி செய்வது, பில்டப் பேட்டிகளால் படத்தை ஓட வைப்பது போன்ற காலங்கள் எல்லாம் மலையேறி விட்டது. படம் ரிலீஸ் ஆன முதல் நாள் முதல் ஷோவிலேயே 10 நிமிஷத்துக்கொருமுறை ட்விட்டரிலும், பிற சமூக வலைத்தளங்களிலும் படத்தை கொத்து பரோட்டா போடும் ரசிகர்கள் காலம் இது.


இந்தியன் 2 திரையரங்கில் ரிலீஸான போதே பலத்த அதிருப்தியை சந்தித்த நிலையில், நேற்று ஓடிடியில் ரிலீஸானதும் இன்று காலை முதலே ரசிகர்கள் இணையத்தில் இந்தியன் தாத்தாவை கதற செய்து வருகின்றனர். ரசிகர்கள் ட்விட்டரில் இந்தியன் தாத்தாவைக் கதற செய்ததைப் பார்த்து படக்குழுவினரும், ஷங்கரும் அப்செட் என்கிறது கோலிவுட் வட்டாரம். 

ரசிப்பதற்கு ஒரு விஷயம் கூடவா இல்லை என்று படக்குழுவினர் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  நேற்று நெட்பிளிஸில் இந்தியன் 2 வெளியான நிலையில்,  ரசிகர்கள் தொடர்ந்து இந்தியன் 2 படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். 

நடிகர் சந்தானம் படத்தைப் பகிர்ந்து, இது தான் பங்கமா கலாய்க்கிறது என்கிற லெவலில் கலாய்த்து வருகிறார்கள். இந்தியன் தாத்தா வாராறு கதற விடப்போராறு என்று அனிரூத் பாடிய பாட்டை அப்படியே உல்டாவாக்கி இந்தியன் தாத்தாவைக் கதறடிக்கிறார்கள். 


ஷங்கர் எடுத்த படங்களிலேயே பாய்ஸ் படம் செய்த மோசமான சாதனையை விட இந்த படம் மிக கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. ஏஆர் ரகுமானுக்கு பதில் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்ததையே ரசிகர்கள் சுத்தமாக ஏற்கவில்லை. படத்தில் கதையிலும் குறைகளை ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா