சரத்பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

 
சரத்பவார்

கடந்த சில நாட்களாகவே சரத்பவார் உடல்நலப் பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

85 வயதான சரத்பவாருக்கு உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதால், அவர் இன்று புனேயில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், கவலைப்படும் வகையில் எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சரத்பவார்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரத் பவார்

சரத்பவார் ஏற்கனவே உடல்நலக் குறைவு காரணமாக இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதிதான் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. சரத்பவார் விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் எனப் பல்வேறு அரசியல் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.