பங்குச்சந்தையில் அனல் பறக்கும் வர்த்தகம்... சென்செக்ஸ், நிப்டி திடீர் உயர்வால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

 
பங்குச் சந்தை உயர்வு பங்குச் சந்தை உயர்வு

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக நிலவி வந்த போர் பதற்றம் தற்பொழுது ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் எதிரொலியாக உலகளாவிய வர்த்தகச் சந்தையில் பெரும் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தையானது இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை மிகவும் உற்சாகமான தொடக்கத்தைக் கண்டு அனல் பறக்கும் வர்த்தகத்தை எதிர்கொண்டுள்ளது.

பங்கு சந்தை ஷேர் மார்க்கெட்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் வர்த்தகத் தொடக்கத்திலேயே கிடுகிடுவென உயர்ந்து 1,100 புள்ளிகளுக்கு மேல்  உயர்வைச் சந்தித்தது. சர்வதேச சந்தை நிலவரங்கள் சாதகமாக மாறியதே இந்த திடீர் ஏற்றத்திற்கு முக்கியக் காரணமாகப் பொருளாதார வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது. சென்செக்ஸ் குறியீட்டெண் தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருப்பது இந்தியத் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய புன்னகையையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.

 பங்கு சந்தை

மும்பை பங்குச்சந்தையைத் தொடர்ந்து தேசிய பங்குச்சந்தையிலும் இன்று காலை வர்த்தகம் மிகச் சிறப்பான லாபத்துடன் தொடங்கியது. அதன் முதன்மைக் குறியீட்டெண்ணான நிப்டி 300 புள்ளிகளுக்கும் மேல்   உயர்ந்து புதிய சாதனை இலக்கை நோக்கிப் பயணித்து வருகிறது. கடந்த வாரம் முழுவதும் தொய்வடைந்து காணப்பட்ட இந்தியப் பங்குச்சந்தை இன்று ஒரே நாளில் மிகப்பெரிய எழுச்சியைக் கண்டு லாபப் பாதையில் சீறிப்பாய்வது ஒட்டுமொத்த வர்த்தக உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.