தன் ஆசைக்கு இணங்காத சித்தாள்.. ஆத்திரத்தில் சுத்தியால் கொடூரமாக தாக்கி கொன்ற கொத்தனார்!

 
வேல்முருகன் - சரண்யா

சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனி 6வது தெருவை சேர்ந்தவர் கௌசல்யா. அவர் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தை கட்டிடக் கலைஞர் சந்துரு நிறைவேற்றி வருகிறார். இங்கு, திருவொற்றியூரைச் சேர்ந்த கொத்தனார் வேல்முருகன் (40), பில்டர் சந்துரு ஆகியோர் கடந்த 29ம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தனர். எம்ஜிஆர் நகர் சூளை பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி சரண்யா (30), சித்தாள் வேலை செய்து வந்தார். மாலையில், வேலை முடிந்ததும், கொத்தனார் வேல்முருகன், சரண்யாவை தன்னுடன் நெருக்கமாக இருக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அவரை எச்சரித்த சரண்யா, வேல்முருகனை வெளியே சென்று அனைவரிடமும் கூறிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன வேல்முருகன், அருகில் இருந்த சுத்தியலை எடுத்து சரண்யாவின் தலையில் அடித்தார். இதில் சரண்யா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே வேல்முருகன் ஒன்றும் தெரியாமல் அங்கிருந்து ஓடினார். பின்னர் வீட்டின் உரிமையாளர் வீட்டை சுற்றி பார்த்தபோது சரண்யா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் அருகே ரத்தத்துடன் ஒரு சுத்தியல் கிடந்தது.

அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கொத்தனார் வேல்முருகனை தேடி வந்தனர். இந்நிலையில், சரண்யா நேற்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார். அதே நேரத்தில், கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி, தலைமறைவாக இருந்த கொத்தனார் வேல்முருகனை, தீவிர தேடுதலுக்கு பின், திருப்பூரில் போலீசார் கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web