ஷ்...ப்பா... கொண்டாடுங்க மக்களே... தமிழகத்தில் மார்ச் 26 வரை மழைக்கு வாய்ப்பு!

 
மழை

கொண்டாடுங்க மக்களே... தமிழகத்தின் உஷ்ணம் குறைய போகிறது. வரும் 26ம் தேதி வரை தமிழகத்தின் பல  பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு மனசையும் குளிர்ச்சியடைய செய்திருக்கிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது. இதனால் முதல் 26ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. 

மழை
அதன்படி இன்றும் நாளையும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். ஏனைய இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனத் தெரிகிறது.  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை மார்ச் 26ம் தேதி வரை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அறிவித்துள்ளது.

மழை
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக இணை நோய் இருப்பவர்கள் முதியவர்களுக்கு சில அசௌகரியங்கள்  ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 24-25 டிகிரி செல்சியசும்,   அதிகபட்ச வெப்பநிலையாக 33-34 டிகிரி செல்சியசும்  இருக்கக்கூடும்” எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web