சொந்த நிலத்தில் 110 மரங்களை வெட்டியதால் ரூ.11 லட்சம் அபராதம்… !
இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில், தனக்குச் சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி 110 மரங்களை வெட்டிய நபருக்கு மாநகராட்சி ரூ.11 லட்சம் அபராதம் விதித்துள்ளது. சொந்த நிலமாக இருந்தாலும் மரங்களை வெட்டுவதற்கு உரிய அனுமதி பெற வேண்டியது அவசியம் என்பதை இந்த நடவடிக்கை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.
Shimla MC imposes Rs 11L fine for axing of 110 trees on private land https://t.co/Vlk2zzSsx2
— The Tribune (@thetribunechd) November 6, 2026
சிம்லா மாநகராட்சியின் விதிமுறைகளின்படி, தனியார் நிலங்களில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டுவதற்கும் வனத்துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றாமல் மரங்களை வெட்டிய நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, வீட்டுமனை அல்லது விவசாய நிலத்தில் உள்ள மரங்கள் தங்களுக்குச் சொந்தமானவை என்பதால் விருப்பம்போல் வெட்டிவிடலாம் எனப் பலரும் நினைக்கின்றனர். ஆனால், மரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் பல மாநிலங்களில் தனியார் நிலங்களிலும் மரம் வெட்டுவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன.
எனவே, மரங்களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வனத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெறுவது அவசியம்
