ஆனந்த் - ராதிகா திருமணத்திற்கு முன் அம்பானி குடும்பத்தினர் செய்த சிவசக்தி பூஜை!

 
அம்பானி
 

இன்று நடைபெற உள்ள ஆனந்த் - ராதிகா திருமணத்திற்கு முன்பாக அம்பானி குடும்பம் தெய்வீக சடங்காக சிவசக்தி பூஜை செய்தனர். காணலாம். நீதா அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட், ஆனந்த் அம்பானி, முகேஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் பிரமல், ஷ்லோகா மேத்தா மற்றும் பேரக்குழந்தைகள் கிருஷ்ணா பிரமல் மற்றும் வேதா ஆகாஷ் அம்பானி ஆகியோர் இந்த விசேஷ பூஜையில் கலந்து கொண்டனர்.

அம்பானி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் இன்று ஜூலை 12 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அம்பானி குடும்பத்தினர் தம்பதியினருக்கு ஆசிர்வாதம் பெறுவதற்காக அவர்களின் இல்லத்தில் சிறப்பு சிவசக்தி பூஜையை நடத்தினர்.
இந்த வீடியோவில், அம்பானி குடும்பம் தெய்வீக சடங்கைச் செய்வதைப் பார்க்கலாம். நீதா அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட், ஆனந்த் அம்பானி, முகேஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் பிரமல், ஷ்லோகா மேத்தா மற்றும் பேரக்குழந்தைகள் கிருஷ்ணா பிரமல் மற்றும் வேதா ஆகாஷ் அம்பானி ஆகியோர் குடும்பமாக நிற்கின்றனர். ஒரு உயரமான கண்ணாடி சிவலிங்கத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளது. நீதா, ஆனந்த், முகேஷ் மற்றும் ராதிகா ஆகியோர் சிவல்லிங்கத்தின் மீது பால், நெய் மற்றும் சிந்தூர் ஊற்றுவதைக் காணலாம். அவர்கள் மந்திரங்களை உச்சரித்து, ஆரத்தி செய்து விழாவை சிறப்பித்து ஆசீர்வதிக்கப்பட்ட திருமணத்திற்காக பிரார்த்தனை செய்தனர்.

அம்பானி
 முன்னதாக, கிரஹ சாந்தி பூஜை விழாவில் ஆனந்த் மற்றும் ராதிகா பங்கேற்றனர். நேர்த்தியான நகைகளால் அலங்கரிக்கப்பட்ட க்ரீம் மற்றும் கோல்டன் புடவையில் ராதிகா அசத்தலாகத் தெரிந்தார், ஆனந்த் தங்க நிற ஜாக்கெட்டுடன் சிவப்பு குர்தாவை அணிந்திருந்தார்.