தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் நிர்வாகி , நீலன் கல்விக் குழுமத்தின் நிறுவனர் காலமானார்!

 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் நிர்வாகி , நீலன் கல்விக் குழுமத்தின் நிறுவனர் காலமானார்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் நிர்வாகியும், நீடாமங்கலம் நீலன் கல்விக் குழுமத்தின்  நிறுவனருமான உ. நீலன் (88) உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக நேற்றிரவு 9 மணியளவில் சென்னையில் காலமானார்.

காங்கிரஸ்


விடுதலை பத்திரிக்கையின் முன்னாள் துணை ஆசிரியராகப் பணியாற்றிய நீலன், பெரியாரின் தொண்டராக திகழ்ந்தவர். 

சென்னை சைதாப்பேட்டை விநாயகம்பேட்டை தெருவில் உள்ள அவரது வீட்டில் இன்று ஏப்ரல் 2ம் தேதி மாலை 3.30 மணி வரையிலும், அதன் பின்னர் மாலை 4.30 மணிக்கு மேல் இரவு 10 மணிவரை கூடுவாஞ்சேரி நீலன் பள்ளி வளாகத்திலும் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை ஏப்ரல் 3ம் தேதி காலை 6 மணி முதல் அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நீலன் பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்களின் அஞ்சலிக்காக திருவுடல் வைக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web