அதிர்ச்சி! திமுக நிர்வாகியின் கணவர் கைது... போலி பாஸ்போர்ட் தயாரித்து பலரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த கொடுமை!

 
போலி பாஸ்போர்ட்

திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் உட்பட 2 பேரை போலீசார், போலி பாஸ்போர்ட் தயாரித்து, 100க்கும் மேற்பட்டோரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 105 பாஸ்போர்ட் போலி ஆவணங்கள், இந்தியா மற்றும் வெளிநாட்டு அரசு முத்திரை, பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய குற்றப்பிரிவில் சென்னை பன்னாட்டு விமான நிலைய குடியுரிமை அதிகாரி ஒருவர், கடந்த 7ம் தேதி இந்தியாவை சேர்ந்த அந்தோணிசாமி என்பவர் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று மலேசியா செல்ல முயன்றதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகாரளித்தார். அவரின் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலி பாஸ்போர்ட், சீட்டுமோசடி மற்றும் கந்துவட்டி புலனாய்வு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து அந்தோணிசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த 2012-ம் ஆண்டு அந்தோணிசாமி மலேசியா சென்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். 8 ஆண்டுகள் மலேசியாவில் வேலை பார்த்து வந்த அந்தோணிசாமியை சில காரணங்களுக்காக அந்நாட்டு அரசு மலேசியாவில் நுழைய தடைவிதித்ததுடன் அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியது. பின்னர் அந்தோணி மீண்டும் மலேசியா செல்ல முடியாமல் தவித்தபோது பெரோஸ்கான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பாஸ்போர்ட்

அதன்பின் பெரோஸ்கான் அந்தோணியை ஏஜெண்ட் சையது அபுதாஹீரிடம் அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து ஏஜெண்ட் அபுதாஹீர், அந்தோணிசாமி என்ற பெயரை மாற்றி ஆண்டனி என்ற பெயரில் போலியாக ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் போலி பாஸ்போர்ட் ஆகியவற்றை தயாரித்து கொடுத்து மலேசியா அனுப்பி வைக்க முயன்ற போது குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கி கொண்டது தெரியவந்தது.

அந்தோணிசாமி அளித்த தகவலின் பேரில் போலீஸார் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது பெரோஸ்கான்(45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெரோஸ்கான் ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்களம் பகுதி திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் என்பதும் தெரியவந்தது. மேலும் போலி ஆவணங்கள்

மற்றும் போலி பாஸ்போர்ட்டுகள் தயார் செய்து அதன் மூலம் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு தகுதியில்லாத நபர்களை பணம் பெற்று கொண்டு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இவருக்கு உடந்தையாக புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த மற்றொரு போலி பாஸ்போர்ட் ஏஜெண்ட் சையது அபுதாஹீர் என்பவர் தலைமறைவானதும் தெரியவந்தது.

பாஸ்போர்ட்

இவர்கள் இருவரும் தஞ்சாவூர் மற்றும் மலேசியாவில் உள்ள பாஸ்போர்ட் அதிகாரி ஒருவரை கையில் வைத்துக்கொண்டு போலியான பாஸ்போர்ட் மூலமாக பலரை வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பேரில் பெரோஸ்கான் மற்றும் சையது அபதாஹிர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினார்கள். 

மொத்தம் 105 போலி பாஸ்போர்ட்கள் மற்றும் போலி ஆவணங்கள், இந்திய அரசு மற்றும் வெளிநாட்டு ஆவணங்களில் பயன்படுத்துவதைப் போன்று போலியான அரசாங்க மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் முத்திரைகள், அதை தயாரிக்கும் உபகரணங்கள், கணினிகள், பணம் 57,000 ஆயிரம், 1000 சிங்கப்பூர் டாலர், 15500 தாய் பட், 25 மலேசியன் ரிங்கிட் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலி பாஸ்போர்ட் மூலமாக எத்தனை பேரை இந்த கும்பல் சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு அனுப்பி உள்ளனர் என்பது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web