ஷாக்.. காங்கிரஸ் நிர்வாகி காட்டு யானை தாக்கி பரிதாபமாக பலி!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை பஞ்சாயத்து 3வது பிரிவைச் சேர்ந்தவர் ஜிம்ஷித் (37). காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர் நேற்று இரவு வெளியே சென்ற பிறகு வீடு திரும்பவில்லை.
இதைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவரைத் தேடினர். அப்போது, காட்டு யானை தாக்கியதில் அவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உடல் மீட்கப்பட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் யானை தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!