அதிர்ச்சி... 26 வயது இளம்பெண் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட அவலம்!

 
அமண்டா
அமெரிக்காவில் 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாலைவனத்தில் ஆடையின்றி நிர்வாண நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த அமண்டா (26), கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி  காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விசாரித்து வந்த போலீசார், அமெண்டாவின் காரை அடுத்த நாள் கண்டுபிடித்தனர். கார் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் சிபோலா நகருக்கு வெளியே ஒரு மரத்தின் கீழ் அமண்டா உடலில் ஆடையின்றி சடலமாக கிடந்துள்ளார். அந்த பகுதி முழுக்கவே பாலைவனப் பகுதியாகும்.

அமண்டா

அமெண்டாவின் சடலம் கைப்பற்றப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மரணத்திற்கான காரணம் குறித்து வெளியிடப்படவில்லை. எனினும் லா பாஸ் கவுண்டி அதிகாரிகள், மரணம் குறித்த கூடுதல் தகவல்களை சேகரிக்க பிரேத பரிசோதனை செய்ய தாங்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கின்றனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இதற்கிடையில், இறப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு அமண்டாவின் 911 அவசர அழைப்பில், அவர் இருக்கும் இடத்தை விளக்க முயன்றது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web