அதிர்ச்சி.. பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய 12 வயது சிறுவன்.. ஒரு குழந்தை பலி.. 2பேர் படுகாயம்!

 
விர்டோலா பள்ளி

பின்லாந்தின் வான்டாவில் மிகவும் பிரபலமான விர்டோலா பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை 800 பேர் படிக்கின்றனர். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என 90 பேர் பணியாற்றி வருகின்றனர். இன்று 12 வயது சிறுவன் பள்ளி வளாகத்திற்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்குள்ள குழந்தைகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் குழந்தைகள் அலறியடித்து அங்குமிங்கும் ஓடினர்.

துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை பலியானதுடன், மேலும்,  இரண்டு குழந்தைகள் பலத்த காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.தகவலறிந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பார்க்க பள்ளிக்கு குவிந்தனர். பள்ளி வளாகத்தில் ஏராளமான போலீசார்கள் திரண்டிருந்தனர். இதன் காரணமாக, அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் பெட்டேரி ஓர்போ கூறினார். பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் பிற மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web