நாடு முழுவதும் அதிர்ச்சி... போதைப்பொருள் கடத்தல், விற்பனை வழக்கில் மற்றுமொரு இளம் ஆசிரியை கைது!

 
போதைப்பொருள் ஆசிரியை

கேரள மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராகப் போலீசார் நடத்தி வரும் சோதனையில், இளம் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியில் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், வடகரை பகுதியில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய 'ஆபரேஷன் டூஃபான்'  என்ற சோதனையின் போது, போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஆசிரியை காவ்யா என்பவர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள்

தீவிர வீரியம் கொண்ட எம்டிஎம்ஏ என்கிற போதைப்பொருளை வாங்க விரும்பும் நபர்கள், ஆசிரியை காவ்யாவின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகப் பணத்தை அனுப்பி வந்துள்ளனர். பணம் கைமாறியவுடன், போதைப்பொருள் எங்கு வைக்கப்பட்டுள்ளது அல்லது அதை எங்கு சென்று பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ரகசிய இடத்தைக் காவ்யா வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்து வந்துள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைவர்கள் பிடிபட்ட நிலையில், இதன் பின்னணியில் உள்ள பெரிய நெட்வொர்க் வெளிச்சத்திற்கு வந்துள்ளது:

இந்த வழக்கில் ஏற்கனவே கீர்த்தனா என்ற மற்றொரு ஆசிரியை கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையின் தொடர்ச்சியாகவே தற்போது ஆசிரியை காவ்யாவின் தொடர்பும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மிஸ் கேரளா மாடல் அழகி ஹர்ஷா சன்னி போதைப்பொருள்

கல்வி கற்பிக்கும் ஆசிரியைகளே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலில் மேலும் பல பெண்கள் ஈடுபட்டிருக்கக் கூடும் எனப் போலிஸார் பலமாக சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து வடகரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இந்த போதைப்பொருள் நெட்வொர்க்கின் முக்கியத் தலைவன் யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.