நாடு முழுவதும் அதிர்ச்சி... மகள் கண் முன்னே தலித் தந்தை அடித்துக் கொலை!

 
அடித்துக் கொலை தலித்

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரில் தலித் இளைஞர் ஒருவர் தனது மகளின் கண் முன்னே கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சீதாபூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் கௌதம் (35) என்ற தலித் இளைஞர், தனது மகளுடன் சென்றுகொண்டிருந்தபோது கும்பல் ஒன்றால் வழிமறிக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார். தனது தந்தையைக் காப்பாற்ற முயன்ற சிறுமியின் கண் முன்னே அந்த நபர்கள் மனோஜ் கௌதமைத் கொடூரமாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகொலை செய்யப்பட்டவரின் உடல் அருகில் குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி அழுத காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனடிப்படையில், இக்கொலைத் தாக்குதலில் தொடர்புடைய சுபம் சிங் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தலைமறைவாகியுள்ள மேலும் இருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கொலை படுகொலை வெட்டிக்கொலை

இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் தலித் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவத்திற்குப் பீம் ஆர்மி அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திர சேகர் ஆசாத் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மாநிலத்தில் அதிகரித்து வரும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்தக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.