நாடு முழுவதும் அதிர்ச்சி... குர்மீத் ராம் ரஹீமுக்கு 17வது முறையாக பரோல் வழங்கி உத்தரவு - பாலியல் வன்கொடுமை கைதிக்கு இத்தனை சலுகைகளா?!

 
குர்மீத் ராம் ரஹீம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மீண்டும் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட குர்மீத் ராம் ரஹீமுக்கு, தற்போது 17-வது முறையாகப் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிலேயே ஏற்கனவே ஜனவரி மாதத்தில் 40 நாட்களும், மே மாதத்தில் 30 நாட்களும் விடுப்பில் வந்திருந்த நிலையில், தற்போது மேலும் 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுச் சிறையிலிருந்து வெளியே வரவுள்ளார்.

சிறை தண்டனை பெற்ற ஒரு குற்றவாளிக்குத் தொடர்ந்து குறுகிய இடைவெளிகளில் பரோல் வழங்கப்பட்டு வருவது மீண்டும் சமூக ரீதியிலான விவாதங்களை எழுப்பியுள்ளது.