நாடு முழுவதும் அதிர்ச்சி... புதுமணத் தம்பதி கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

 
புதுமண தம்பதி காதல் காதலர்கள் கணவன் மனைவி இளம்பெண்

மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள தபதி ஆற்றில், கால்கள் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் புதுமணத் தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாம் ஹரி பாட்டீல் மற்றும் சப்னா பாட்டீல் தம்பதியினர், சில மாதங்களுக்கு முன்புதான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பள்ளி மானவி தற்கொலை

இவர்களைக் காணவில்லை என உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், துலே மாவட்டத்தில் உள்ள தபதி ஆற்றிலிருந்து இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.

இறந்து கிடந்த தம்பதியினரின் கால்கள் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்ததால், இது திட்டமிடப்பட்ட கொலையா அல்லது தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் அவர்களாகவே கட்டிக்கொண்டனரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.