நாடு முழுவதும் அதிர்ச்சி... பிக்கப் வாகனம் சாலையோரக் கிணற்றில் கவிழ்ந்து விபத்து... 4 குழந்தைகள் உட்பட 14 பேர் நீரில் மூழ்கி பலி!

 
கிணற்றில் சாலையோர கிணற்றில் சாலையோர

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் நெஞ்சைப் பதற வைக்கும் சாலை விபத்துச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரே வாகனத்தில் பயணம் செய்த 14 பேர் கிணற்றுத் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பக்தர்கள் குழுவினர், தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காகப் பிக்கப் ரக சரக்கு வாகனம் ஒன்றில் குடும்பத்தோடு புகழ்பெற்ற கோயிலுக்குச் சென்றுள்ளனர். சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு, அவர்கள் அனைவரும் நேற்று மாலை தங்களது சொந்த ஊருக்கு அதே பிக்கப் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவர்களது வாகனம் சோலாப்பூர் மாவட்டம் தாண்டல்வாடி கிராமத்தின் அருகே உள்ள பிரதான நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், கண்சிமிட்டும் நேரத்திற்குள் சாலையோரமாக இருந்த ஒரு கிணற்றுக்குள் பாய்ந்து, தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பள்ளி மானவி தற்கொலை

விபத்து நடந்த அந்தச் சாலையோரக் கிணற்றில் எவ்விதப் பாதுகாப்புச் சுவரோ அல்லது இரும்புத் தடுப்பு வேலியோ இல்லாததே, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நேரடியாகக் கிணற்றுக்குள் பாய்வதற்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வாகனம் விழுந்த அடுத்த சில நிமிடங்களிலேயே கிணற்றுத் தண்ணீர் வண்டிக்குள் புகுந்ததால், உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்தில், வாகனத்தில் இருந்த 4 குழந்தைகள் மற்றும் 4 பெண்கள் உட்பட மொத்தம் 14 பேர் தண்ணீருக்குள் மூச்சுத்திணறிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோலாப்பூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், கிணற்றில் இருந்து 14 பேரின் உடல்களையும், விபத்துக்குள்ளான பிக்கப் வாகனத்தையும் நீண்ட போராட்டத்திற்குப் பின் வெளியே மீட்டனர்.

இக்கோரச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த சோலாப்பூர் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் ஜெயக்குமார் கோரே, விபத்து நடந்த தாண்டல்வாடி பகுதிக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "பக்தர்கள் 14 பேர் பலியான இத்துயரச் சம்பவம் குறித்துப் போலீஸ் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மூலம் முழுமையான உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு, விபத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்துள்ளார்.

கோயிலுக்குச் சென்று திரும்பிய ஒரே கிராமத்தைச் சேர்ந்த 14 பேர் கிணற்றில் மூழ்கிப் பலியான சம்பவம் மகாராஷ்டிர மாநில மக்களிடையே பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.