அடுத்தடுத்து அதிர்ச்சி... 6.2 ரிக்டர் அளவில் துருக்கியில் நிலநடுக்கம் !

துருக்கியில் கலாச்சார மற்றும் முக்கிய பொருளாதார நகரம் இஸ்தான்புல். இந்நகரில் இன்று ஏப்ரல் 23ம் தேதி பிற்பகல் 12.49 மணிக்கு 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்தான்புல் மாகாணத்தில் அமைந்துள்ள மர்மரா கடலுக்கு அருகிலுள்ள சிலிவ்ரி எனும் பகுதியை மையமாகக் கொண்டு நிலப்பரப்பிலிருந்து சுமார் 6.92 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக துருக்கியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தினால், அப்பகுதிவாசிகள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இதனால் உயிர் மற்றும் பொருள் சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து இதுவரை எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.
ஆனால், இந்த நிலநடுக்கத்தினால் அந்நகரத்தில் தொடர்ந்து அதிர்வலைகள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. முன்னதாக, நிலநடுக்கம் அபாயமிகுந்த நாடாக கருதப்படும் துருக்கியில் 2023 பிப்ரவரி மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!