தூத்துக்குடியில் மீண்டும் அதிர்ச்சி... 15 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது!

 
சிறுமி பாலியல் பலாத்காரம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரான கருப்பசாமி என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, இது குறித்துத் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், உடனடியாகக் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில், போலீசார் வாலிபர் கருப்பசாமி மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை பலாத்காரம் கர்ப்பம் கர்ப்பிணி

போலீசார் வழக்குப் பதிவு செய்ததை அறிந்ததும் கருப்பசாமி அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். இதையடுத்து, குற்றவாளியைப் பிடிக்க போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த கருப்பசாமியை போலீசார் இன்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.