மீண்டும் அதிர்ச்சி... ரஷ்யாவின் டிரோன் தாக்குதலில் உக்ரைனில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி!!

 
ரஷ்யா உக்ரைன்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனில் பல்வேறு பகுதிகளை  ராணுவம் கைப்பற்றியது. அதே சமயத்தில் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் போரை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருகிறது.  

உக்ரைனின் பெரிய நகரமான சுமியில்  ரஷியா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு  சேதம் அடைந்தது. இருப்பினும் இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த குடியிருப்பில் வசித்திருந்த 120 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அதேபோல் உக்ரைனின் தெற்கு ஒடேசா பகுதியில், ரஷ்ய டிரோன்கள் ஒரு மருத்துவமனை மற்றும் இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களை சேதப்படுத்தியதாக பிராந்தியத் தலைவர் ஓலே கிப்பர் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.  யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார்.  

ரஷ்யா உக்ரைன்

இரவு நேரங்களில் ரஷியா ஏவிய 80க்கும் மேற்பட்ட டிரோன்களை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. ரஷ்யா உக்ரைனில் இரவு முழுவதும் 80க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவியதாக விமானப்படை தெரிவித்துள்ளது, இவை பொதுவான இரவு நேரத் தாக்குதல்கள். பெரும்பாலான டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web