மீண்டும் ஷாக்.. லாஸ் ஏஞ்சல்ஸில் பரவிய காட்டு தீ.. முதல் கட்டமாக வெளியேற்றப்பட்ட 18,600 பேர்!

 
 லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ

கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டு தீவிரமாக பரவியது. இந்த பயங்கர காட்டுத்தீயால் 35000 ஏக்கர் தீயில் கருகி சாம்பலாகியுள்ளது. 12000  வீடுகள்   கட்டடங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். காட்டுத் தீயில் சிக்கி  பலர் உயிரிழந்தனர்.

காட்டுத்தீ ரசாயணம்

இந்நிலையில்,  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் காட்டுத்தீ பரவத் தொடங்கியுள்ளது, இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸின் தெற்குப் பகுதியில் 3,407 ஏக்கர் நிலத்தை காட்டுத்தீ சேதப்படுத்தியுள்ளது, மேலும் அந்தப் பகுதியில் வசிக்கும் 18,600 பேர் முதல் கட்டமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டுத்தீ காரணமாக சான் கேப்ரியல் மலைகளில் உள்ள பூங்காவிற்குள் பார்வையாளர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வருகின்றனர். காட்டுத்தீ காரணமாக காற்றில் கரும்புகை எழும்பி வருவதால், விமானங்கள் மாற்றுப் பாதைகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web