அதிர்ச்சி... நடிகைகள் ராஷ்மிகா, கஜோலைத் தொடர்ந்து அலியா பட்டின் வைரல் வீடியோ!

 
அலியா பட் டீப் பேக்
விஞ்ஞானத்தின் வளர்ச்சி வரமா, சாபமா என்று புரியாத தலைமுறையில் வாழ்ந்து வருகிறோம். தொழில்நுட்பத்தில் புதியதாக அறிமுகப்படுத்தப்படுகிற விஷயங்களை எப்படி அழிவுக்கு பயன்படுத்தலாம் என்று ஒரு கும்பல் எல்லா காலங்களிலும் இருக்கும் போல. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் என்கிற கதை தான். மத்திய அரசு, டீப் பேக் வீடியோக்கள் குறித்து கடுமையாக எச்சரித்தும், நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா, கஜோலைத் தொடர்ந்து நடிகை அலியா பட்டின் டீப் ஃபேக் ஆபாச வீடியோ இணையத்தில் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வகையிலான டீப் ஃபேக் தொழில்நுட்பம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா, கஜோலைத் தொடர்ந்து தற்போது அலியா பட்டும் இதில் சிக்கியுள்ளார்.

'டீப் ஃபேக்' விவகாரம் ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தல் என குறிப்பிட்டுள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இதனைத் தடுக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக முன்பு தெரிவித்தார்.மத்திய அரசால் இப்படியான எச்சரிக்கைகள் விடப்பட்ட பிறகும் கூட இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.

கஜோல் டீப் பேக்

தற்போது பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற ஒரு வீடியோவில் நடிகை அலியாவின் முகத்தை ரீப்ளேஸ் செய்து இந்த டீப் ஃபேக் வீடியோவை இணையத்தில் வைரலாக்கியுள்ளனர். இது அலியாவின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை போலியாகப் பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web