அதிர்ச்சி.. புதுச்சேரி சிறுமி சடலம் கிடந்த அதே கால்வாயில் மற்றொரு சடலம்!

 
ஞானபிரகாசம்

புதுச்சேரி சோலை நகர் பகுதியில் 5ம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார். சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமியை காணவில்லை. இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சோலைநகர் அம்பேத்கர் சாலை மற்றும் கண்ணதாசன் சாலை இடையே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் சிறுமி சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்தார். பிரேத பரிசோதனையில் அவர் பலாத்காரம் செயப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

ஆர்த்தி

இதையடுத்து போலீசார் போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து அப்பகுதியை சேர்ந்த விவேகானந்தன், கருணா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. புதுவை முழுவதும் போராட்ட மண்டலமாக மாறியது. இந்த சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள் நேற்று காலை அதே வாய்க்காலில் அழுகிய நிலையில் மற்றொரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.

தகவல் அறிந்த முத்தியால்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சோலையை சேர்ந்த ஞானபிரகாசம் (35) என்பவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவர் மது அருந்துவது வழக்கம் என்றும், அதனால் அடிக்கடி குடித்துவிட்டு கீழே விழுவார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 23ம் தேதி ஞானப்பிரகாசம் வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில், சிறுமி இறந்து கிடந்த அதே வாய்க்காலில் ஞானப்பிரகாசம் பிணமாக கிடந்துள்ளார். உடல் அழுகிய நிலையில் கிடந்ததால் அவரை யாராவது அடித்து கொன்று வாய்க்காலில் வீசினார்களா அல்லது குடிபோதையில் வாய்க்காலில் விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web