கோவிலில் பெரும் அதிர்ச்சி.. மூதாட்டியை சரமாரியாக வெட்டிக் கொன்று கருவறைக்குள் ஒளிந்து கொண்ட இளைஞர்!
தர்மபுரி நகரில் உள்ள குமாரசாமிபேட்டையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயில்கள் உள்ளன. இன்று காலை வழக்கம் போல் கோவில் நடை திறக்கப்பட்டு ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலை ராஜேஸ்வரி(55) என்ற மூதாட்டி சுத்தம் செய்து கொண்டிருந்த போது, திடீரென காவலர் உடை அணிந்து வந்த வாலிபர் ஒருவர் பெரிய கத்தியுடன் கோவிலுக்குள் நுழைந்தார். அப்போது வேலை செய்து கொண்டிருந்த ராஜேஸ்வரியை தலை, கழுத்து, காது, கை உள்ளிட்ட 13 இடங்களில் கத்தியால் சரமாரியாக வெட்டினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ராஜேஸ்வரி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, கத்தியை காட்டி அனைவரையும் விரட்டினார். மக்கள் கூட்டத்தை பார்த்த வாலிபர் திடீரென கோவிலின் கருவறைக்குள் ஓடி சென்று கதவை பூட்டிக்கொண்டார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ராஜேஸ்வரியை அங்கிருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கோவில் கருவறையில் இருந்த இளைஞரை பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த சித்தி விக்னேஷ் (22) என்பது தெரியவந்தது. மேலும் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் இருந்து ரயிலில் தர்மபுரிக்கு வந்தார். சித்தி விக்னேஷ் தர்மபுரிக்கு வந்து தர்மபுரியை ஒட்டியுள்ள பகுதியில் சுற்றித்திரிந்தார். நேற்று முன்தினம் இரவு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுற்றித் திரிந்த அவர், அங்கு பணியில் இருந்த காவலர்கள் அறைக்கு சென்று, தலைமை காவலர் உடையை எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை குமாரசாமிபேட்டை பகுதியில் இளநீர் வியாபாரி பலாப்பழ வியாபாரியிடம் தகராறு செய்துள்ளார்.

பலாப்பழ வியாபாரியிடம் இருந்து கத்தியை பறித்த வாலிபர் தலைமைக் காவலர் வேடமிட்டு கத்தியுடன் பல இடங்களில் சுற்றித் திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், திருச்செந்தூர் பகுதியில் இதுபோன்று பல இடங்களில் தகராறு, அடிதடி, போதையில் சுற்றி திரிவது போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. மேலும் இன்றும் அவர் அதிக போதையில் இருந்ததாக தெரிகிறது. மேலும் அவர் வேறு ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டுள்ளாரா? எதற்காக கோவிலுக்கு சென்று பெண்ணை வெட்டினார் என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரபல கோவிலுக்குள் பட்டப்பகலில் சென்று பெண்ணை கத்தியால் வெட்டிய சம்பவம் குமாரசாமிபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
