அதிர்ச்சி... போலீசார் மிதித்ததில் குழந்தை மரணம்... கிராம மக்கள் போராட்டம்!

 
குழந்தை உயிரிழப்பு


ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் போலீசார் மிதித்து குழந்தை பலியானதாக கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், 2 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் நாகாவான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் இணைய மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் கடந்த மார்ச் 1ம் தேதி அந்த கிராமத்திற்கு சென்றனர்.

குழந்தை  பலி

அங்கு கட்டிலில் தனது தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த பிறந்து ஒரு மாதமேயான குழந்தை அலிஸ்பா மீது போலீசார் மிதித்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் மிதித்ததில் காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது. 

குழந்தையின் தாய் போலீசாரை எதிர்த்தபோது அவரையும் வீட்டை விட்டு 2 போலீசாரும் வெளியே தள்ளி உள்ளனர்.

குழந்தை

இந்த சோதனையின்போது பெண் போலீசார் யாரும் உடன் செல்லவில்லை என்றும் இதில் சம்பந்தப்பட்ட 2 போலீஸ் அதிகாரிகளைக் கைது செய்யவேண்டும் என்றும் குடும்பத்தினர் புகார் ட் தெரிவித்ததின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தை பலியானதால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் போலீசார் இருவரையும் கைது செய்யக்கோரி அல்வார் மவட்ட காவல் கண்காணிப்பாளர் வீட்டின் முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

From around the web